உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலை முயற்சி: காதல் பிரச்னையில் விபரீதம்

சிறுமியை துப்பாக்கியால் சுட்டு காதலன் தற்கொலை முயற்சி: காதல் பிரச்னையில் விபரீதம்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே துவராபதியில் காதல் பிரச்னையில் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வெள்ளிமலைப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லம் 19. இவர் துவராபதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு அடிக்கடி வருவார். அப்போது 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். நேற்று மதியம் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமுற்ற செல்லம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சிறுமியை சுட்டார். இதில் சிறுமிக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. பின் செல்லம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.காயமுற்ற சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !