மேலும் செய்திகள்
கேசரி கண்மாயில் மீன்பிடி திருவிழா
30-Apr-2025
நத்தம்: -நத்தம் அருகே கோசுகுறிச்சி- ஒத்தக்கடையை சேர்ந்தவர் அப்துல்கபூர் 38. சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷாஜிதாபேகம் 30. இவர் தனது குழந்தைகளுடன் கோசுகுறிச்சி- ஒத்தக்கடையில் வசித்து வருகிறார். ஷாஜிதா தினமும் மாலையில் அருகில் உள்ள தனது அம்மாவின் வீட்டில் இருந்து விட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த ஏப்.29-ம் தேதி மாலை அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று காலை சென்னையில் இருந்து வந்தபோது அப்துல்கபூர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 3 வெள்ளி செயின்கள் திருடு போயிருந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Apr-2025