மேலும் செய்திகள்
கராத்தே போட்டியில் அன்னுார் மாணவர்கள் சாதனை
27-Sep-2024
ஒட்டன்சத்திரம்,: திருச்சியில் நடந்த 2024--25 ம் கல்வி ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் கள்ளிமந்தையம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவியர் அணி திண்டுக்கல் மாவட்டத்திற்காக விளையாடி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.காலிறுதி போட்டியில் ராணிப்பேட்டை, தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களை வென்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.அரை இறுதிப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை வென்றது. ஒவ்வொரு மாணவிக்கும் வெண்கல பதக்கம், சான்றிதழ், தலா ரூ.25 ஆயிரம் என ரூ. 3.50 லட்சம் வழங்கப்பட்டது.இவர்களை தாளாளர் ஜெயசெல்வி, பள்ளி முதல்வர் முத்துவேல், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்பாராட்டினர்.
27-Sep-2024