உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜல்லிக்கட்டு தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து அண்ணன், தம்பி கைது

ஜல்லிக்கட்டு தகராறில் 3 பேருக்கு கத்திக்குத்து அண்ணன், தம்பி கைது

நத்தம்:திண்டுக்கல்மாவட்டம் வெள்ளாளபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட தகராறு முன் விரோதம் தொடர்பாக மூன்று பேரை கத்தியால் குத்திய மாடுபிடி வீரர்களான அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் ரதன் 21. இவர் நண்பர்களான கவுதம் 23, கோவில்பட்டி மேலத்தெருவை சேர்ந்த தேவா 21,ஆகியோருடன் மார்ச் 28-ல் வெள்ளாலபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் களைகளை அடக்க களத்தில் இறங்கினர். அப்போது மாடு பிடிப்பதில் நடுவனுாரை சேர்ந்த 17 வயதான வீரருக்கும், இவர்கள் மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனிடையே நேற்று முன்தினம் மாலை ரதன் உள்ளிட்ட மூவரும் நடுவனுார் சென்று அந்த மாடுபிடி வீரரிடம் வாக்குவாதம் செய்தனர் . இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட ஆத்திரமடைந்த மாடுபிடி வீரர், அவரது அண்ணன் பொன்னையா 19, ஆகியோர் கத்தியால் மூன்று பேரையும் குத்தி விட்டு தப்பினர். மூவரும் காயமடைந்தனர். மாடுபிடி வீரர், அண்ணனை நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ