உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 62வது மலர் கண்காட்சிக்கு பிரையன்ட் பூங்கா தயார்

62வது மலர் கண்காட்சிக்கு பிரையன்ட் பூங்கா தயார்

முதற்கட்டமாக 30 ஆயிரம் நாற்று நடவுப்பணி துவக்கம்கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சிக்கான முதற்கட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஏப்ரல், மே மாதத்தில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடப்பது வழக்கம். லட்சக்கணக்கான பயணிகள் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிப்பார். இதற்காக ஒரு மாதத்திற்கு முன் மலர்படுகைகள் தயார் செய்யும் பணி நடந்தது. தற்போது 62வது மலர்கண்காட்சிக்கான முதற்கட்ட நாற்று நடவுப்பணி நேற்று தொடங்கியது. இப்பணிகள் தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும். இதில் 30 ஆயிரம் நாற்றுக்கள் நட உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர். தற்போது பிங்க் ஆஸ்டர், டெல்பீனியம்,சால்வியா, வைட் பாஸ்டர், அஸ்ட்ரோமேரியா, லில்லியம், ஆர்னத்திகேலம் உள்ளிட்ட நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. பணிகளை தோட்டக்கலை துணை இயக்குனர் நடராஜன் ஆய்வு செய்தார். தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை