மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
15-Jun-2025
ஆத்துார் : ஆத்துார் சின்ன வண்டிகாளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை, பன்றி, சேவல் பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடந்தது.செம்பட்டி அருகே ஆத்துார் நந்தனார் தெருவில் சின்ன வண்டி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இக்கோயில் திருவிழா அக்கரைப்பட்டியில் கரகம் பாலித்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் ஊர்வலத்தை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி , பொங்கல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கிராம நேர்த்திக் கடன் செலுத்துதல் நடந்தது. இதையொட்டி கோயில் முன்பாக குழி தோண்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்க . பன்றி, எருமை, சேவல் பலியிடப்பட்டன. விழா நிறைவாக அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.
15-Jun-2025