உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கட்டுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : கட்டடங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களான ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை தணிச்சையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகள் பாதிப்படைகிறது. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் அகில இந்திய கட்டுநர் சங்கம்,கட்டட பொறியாளர்கள் நலவாழ்வு சங்கம்,கட்டட பொறியாளர்கள் சங்கம்,அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய கட்டுநர் சங்க மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.செயலாளர் பவுல்ராஜ், பொருளாளர் மாரியப்பன், கட்iட பொறியாளர் சங்கம் தலைவர் தங்கதுரை,செயலர் குணசீலன்,பொருளாளர் சிவபாலன்,கட்டிட பொறியாளர்கள் நலச்சங்கம் தலைவர் டேவிட் பிராங்க்ளின்,அரசு மாவட்ட ஒப்பந்தக்காரர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, அகில இந்திய கட்டுநர் சங்க முன்னாள் தலைவர்கள் ஜனகர், அப்துல் காதர், வீர மார்பன் ,முன்னாள் தலைவர்கள் குமரேசன், பெஞ்சமின், ஜான் சந்தியாகு, ராஜேஸ்வரன், ஜோசப் ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை