உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மன்னவனுாரில் சகதிக்காடான பஸ் திருப்பம்; பயணிகள் அவதி

 மன்னவனுாரில் சகதிக்காடான பஸ் திருப்பம்; பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுார் பஸ் திருப்பம் சகதியால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. மன்னவனுார் நுழைவுவாயில் வளைவில் பஸ் திருப்பம் உள்ளது. கஜா புயலின் போது தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தாங்குசுவர் கட்டமைக்கப்பட்டது. இதில் தரைத்தளம் கான்கிரீட் அமைக்காமல் மண் தரையாக விடப்பட்டது. தாழ்வான இப்பகுதியில் இணையும் சாக்கடையில் கனமழையால் அடைப்பு ஏற்பட்டு பஸ் திருப்ப பகுதியில் கழிவு நீர், குப்பை சேர்ந்து சகதியாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் தோல் நோயால் பாதிக்கின்றனர். கொசுக்கள் அதிகரித்து அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் , வணிக நிறுவனத்தினர் அவதிப்படுகின்றனர். மேல்மலை பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மன்னவனுாரில் நீடிக்கும் சுகாதாரக்கேட்டை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி