உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உழவர் திட்டத்திற்கு அழைப்பு

ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உழவர் திட்டத்திற்கு அழைப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள அனைத்து சிறு குறு விவசாயிகள் , விவசாயக் கூலி தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட நிதி ஒதுக்கீடு வரப்பெற்றது. சிறு குறு விவசாயிகள் , கூலித் தொழிலாளிகள் தங்களிடம் உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை இருப்பின் 6 மாதங்களுக்குள் தங்களது குடும்பத்தில் ஏதேனும் இயற்கை மரணம், விபத்து மரணம், குழந்தைகளின் திருமணம், குழந்தைகள் கல்லுாரியில் படித்தால் கல்வி உதவித்தொகை பெற முடியும். உழவர் பாதுகாப்பு அட்டை, வங்கி கணக்கு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலரை உடன் அணுகவும். இதுவரை உழவர் அட்டை பெறாத சிறு குறு விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளிகள் தங்களது கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி உழவர் அட்டை பெற முடியும் என ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கனகராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி