உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொதுவெளிகளை பார் ஆக்கும் குடிமகன்களை கட்டுப்படுத்தலாமே: தினம் தினம் நடக்கும் கூத்தால் மக்கள் அவதி

பொதுவெளிகளை பார் ஆக்கும் குடிமகன்களை கட்டுப்படுத்தலாமே: தினம் தினம் நடக்கும் கூத்தால் மக்கள் அவதி

மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாவட்ட ,மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இப்பகுதிகளில் பொது இடங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. முக்கியச் சாலைகளின் உள்ள கடைகளுக்கு முன்புற இடங்களில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அப்பகுதியில் அசுத்தம் செய்கின்றனர். விவசாய நிலங்களில் மது குடித்துவிட்டு உடைந்த பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் பாதிக்கின்றனர் குளத்துக்கரைகள் ,ஆற்றுப் பாலங்கள் ,பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர் இதனை கட்டுப்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநி கொடைக்கானல் சாலையில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர் இப்பகுதியில் இருபுறமும் சாலை ஓரங்களில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மது குடிக்கும் நபர்கள் அரைகுறை ஆடையுடன் கிடக்கின்றனர் இதனால் பெண்கள் அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்படுகிறது .மேலும் மது போதையில் சிறு குற்றங்களில் ஈடுபடும் நிலையும் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை