உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோய் விழிப்புணர்வு

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சங்கரழகு முன்னிலை வகித்தார். உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார டாக்டர் ஐஸ்வர்யா பங்கேற்று பேசுகையில், ‘புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். அச்சப்பட தேவையில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அன்புடன் நடத்த வேண்டும்’ என்றார். தொடர்ந்து அனைவரும் புற்றுநோய் உறுதிமொழியை ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை