தேனீக்களால் பள்ளத்தில் விழுந்த கார்
வடமதுரை : சென்னை அம்பத்துார் அய்யம்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜித் 43. காரில் மனைவி பிண்டு 37, மகன் ரூபன் 10, மகள் நியா 3, ஆகியோருடன் கேரளா சென்றார். அய்யலுார் தங்கம்மாப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது தேனீக்கள் கூட்டம் மோதியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் விழுந்தது. சிறுமி நியா காயமடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.