மேலும் செய்திகள்
எடியூரப்பா மீதான வழக்கு ஜன., 7க்கு ஒத்திவைப்பு
20-Dec-2024
திண்டுக்கல்:தேர்தல் பொதுக்கூட்டத்தில் கூடுதல் நேரம் பேசியதாக ம.தி.மு.க.,பொதுச்செயலர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராகாததால் விசாரணையை ஜன.20க்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.திண்டுக்கல் மணிக்கூண்டில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் பொதுக்கூட்டத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் பேசியதாக வைகோ, அக்கட்சி மாவட்ட செயலாளர் செல்வராகவன் உட்பட கூட்டணி கட்சியினர் 12 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் விசாரணை திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்தது.இதை தள்ளுபடி செய்ய வைகோ,செல்வராகவன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திண்டுக்கல் வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி திண்டுக்கல் ஜெ.எம்.2., நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணையில் டிச.13ல் வைகோ உட்பட 12 பேர் ஆஜராகினார். விசாரணையை ஜன.7க்கு நீதிபதி சவுமியா மேத்யூ ஒத்திவைத்தார். அதன்படி நேற்று இந் நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்புடையவர்கள் ஆஜராகினர். வைகோ ஆஜராகவில்லை. விசாரணை ஜன.20க்கு ஒத்திவைக்கப்பட்டது.
20-Dec-2024