மேலும் செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது
01-Nov-2025
கொடைக்கானல்: கோவை பள்ளபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். நண்பர்கள் ஜவஹர், மணிகண்டனுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். வில்பட்டி அட்டுவம்பட்டிலுள்ள தனியார் காட்டேஜில் தங்கிய நிலையில் ஊர் திரும்ப காரில் சென்றனர். அட்டுவம்பட்டியில் காதணி விழா ஊர்வலம் சென்றவர்கள் காருக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். வழி விட கேட்டதற்கு கட்டையால் தாக்கியதில் ஜவஹர், மணிகண்டன் காயமடைந்தனர். அட்டுவம்பட்டி காலனியைச் சேர்ந்த சார்லஸ் 32, அருண், கருப்பையா, தினகரன், ஜீவா 18, அருண்குமார் 28 உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
01-Nov-2025