மேலும் செய்திகள்
வாசன் கண் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் சாதனை
12-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 10 மாத ஆண் குழந்தைக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ரெட்டியார்சத்திரம் சில்வார்பட்டி அப்பணம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் குமார், அமலா தேவி தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை கேசவ் யாதவ். குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவுக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். பரிசோதனை செய்ததில் சைட்டோ மெஹெல்லோ வைரஸ் எனும் நோய் பாதிப்பால் இரு கண்களிலும் கண்புரை ஏற்பட்டுள்ளது. டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, கண் பிரிவு தலைமை மருத்துவர் ரவீந்திரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஆலோசனை பின் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் சில மாதங்களுக்கு முன் வலது கண்ணில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. வலது கண்ணில் பார்வை கிடைத்த நிலையில் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இடது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைக்கு இரு கண்களிலும் பார்வை கிடைத்தது.
12-Mar-2025