மேலும் செய்திகள்
ரூ.2500 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது
08-Aug-2025
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் காளி 60. நாட்டு மாடுகள் வளர்த்து வந்த இவரை இரு நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் காளியை தேடி வந்த நிலையில், அப்பகுதி ராமன் 35,உடன் வெளியே சென்றதாக தெரியவர ஆத்துார் பகுதியில் பதுங்கி இருந்த ராமனை பிடித்து விசாரித்தனர். இதில் நாட்டு மாடு வாங்கி தர கூறி ராமனிடம் காளி ரூ.3 லட்சத்திற்கு மேல் கொடுத்திருந்தார்.ஆனால் ராமன் மாடுகளை வாங்கி தரவில்லை. இதனால் காளி,ராமன் இடையே தகராறு ஏற்பட காளியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்த உடலை அய்யம்பாளையத்தில் உள்ள காளி தோட்டத்தில் புதைத்து சென்றது தெரிந்தது. இதைதொடர்ந்து போலீசார் ராமனை கைது செய்தனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தை ராமர் அடையாளம் காட்ட ஆத்துார் தாசில்தார் முன்னிலையில் நேற்று காளியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
08-Aug-2025