உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு

மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு

பள்ளத்தால் விபத்துகோபால்பட்டி அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது. பல மாதங்களாக உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதால் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. பழனியப்பன், கே.அய்யாபட்டி...........................--------ரோட்டில் தேங்காய் மட்டைபழநி குளத்துார் ரோட்டில் தேங்காய் மட்டைகளை கொட்டி அப்படியே விடப்பட்டுள்ளது .இதனால் பக்தர்களுக்கும் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது .தேங்காய் விற்பனை செய்வார்கள் அள்ளிச் செல்லாமல் ரோட்டிலே விட்டு செல்வதை தடுக்க வேண்டும் .ரவிச்சந்திரன் பழநி..............--------சேதமடைந்த ரோடுவேடசந்துார் தாலுகா சித்துார் கிராமம் நல்லமநாயக்கன்பட்டி ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாகும் சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். க.சண்முககுமார், நல்லமநாயக்கன்பட்டி..................--------மின் கம்பத்தில் செடிகள்அய்யம்பாளையத்தில் இருந்து தேவரப்பன்பட்டி செல்லும் ரோட்டில் மின்கம்பம் முழுவதும் செடிகள் படர்ந்து உள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது .அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர். மின்கம்பத்தில் உள்ள செடியை அகற்ற வேண்டும்.மணிவேல், தேவரப்பன்பட்டி.....................--------ரோட்டில் குப்பை குவியல்திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பையை மலைபோல் குவித்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. வேறு பகுதியில் இருந்தும் குப்பையை கொட்டி அகற்றாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது . இதை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சவுசல்யா, என்.ஜி.ஓ., காலனி...................--------சுரங்க பாதையில் கழிவுநீர்திண்டுக்கல் சின்னையாபுரம் ரயில்வே சுரங்க பாதையில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த வழியில் வாகன ஓட்டிகள் ஏராளமாக சென்று வருவதால் இங்கு கழிவு நீர் தேங்காது தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகாலட்சுமி, திண்டுக்கல்......................---------ரோடு பள்ளத்தால் ஆபத்துபழநி காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதை அறிய குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கிழே விழுகின்றனர் .சிந்து,பழநி..................-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்