உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெள்ளை விநாயகர் கோயிலில் சதுர்த்தி முகூர்த்தகால்

வெள்ளை விநாயகர் கோயிலில் சதுர்த்தி முகூர்த்தகால்

திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. விநாயகர் சதுார்த்தி ஆக. 27 ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோயிலில் ஆக. 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழா விநாயகர் சதுர்த்தியான ஆக.27 வரை நடக்கும். இதை தொடர்ந்து வெள்ளை விநாயகர் கோயிலின் 70 வது விநாயகர் சதுர்த்தி விழா முகூர்த்தக்கால் நடுதல் நேற்று நடந்தது. காலை 9:15க்கு பூஜைகள் நடக்க ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் அறங்காவலர்கள் முன்னிலையில் மூகூர்த்தக்கால் நடப்பட்டது.தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர். விழாவில் தினமும் மண்டிப்படி பூஜைகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி