உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். வள்ளி கும்மியாட்டம், சொற்பொழிவு, ஓவியப்போட்டி, பூமியை காப்போம், சுற்றுச்சூழலை காப்போம் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டி, கழிவு பொருட்களை கொண்டு உபயோகப்படுத்தப்படும் பொருட்களை மாணவர்கள் தயார் செய்து திறமைகளை வெளிப்படுத்தினர். தலைமை ஆசிரியர் எஸ். ரங்கசாமி , உதவி தலைமை ஆசிரியர் எஸ். செல்வராணி கலந்து கொண்டனர்.திண்டுக்கல் ஸ்ரீ காமராஜர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பள்ளி செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முதல்வர் லதா தலைமை வகித்தார். கலெக்டர் அனுப்பிய வாழ்த்து மடலை படித்து காண்பிக்கப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் தின சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அலுவலக மேலாளர் அகிலன் ஏற்பாடுகளை செய்தார்.வடமதுரை : அய்யலுார் தங்கம்மாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் வட்டார வளமைய ஆசிரியர் சுமதி தலைமையில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அனுராதா முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். பள்ளி மேன்மை மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை