மேலும் செய்திகள்
இன்று இனிதாக..... திண்டுக்கல்
13-May-2025
வடமதுரை: அய்யலுார் கெங்கையூர் மண்டபத்தோட்டத்தில் சக்திமுத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் உற்ஸவ திருவிழா நடந்தது. ஆபரணப் பெட்டி அழைப்புடன் துவங்கிய விழாவில் கரகம் பாலித்தல், பூக்குழி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் , கருப்பசுவாமிக்கு கிடாய் வெட்டுதல், முன்மண்டபம் பார்த்தல் என பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.
13-May-2025