உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.200 கோடியில் கூட்டுறவு பயிற்சி இணையம்: அமைச்சர் சக்கரபாணி

ரூ.200 கோடியில் கூட்டுறவு பயிற்சி இணையம்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலால் நடத்தப்படும் ஒட்டன்சத்திரம் பழனியாண்டவர் மகளிர் கலை கல்லுாரிக்கு 8 ஏக்கரில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணிகளை தொடங்கி வைத்தும், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 34 ஊராட்சிகளுக்கு ரூ.86 லட்சம் மதிப்பிலான 34 மின்கலன் வண்டிகளை வழங்கிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:கல்லுாரி கட்டுமான பணிகள் 2026 ஜனவரியில் முடிந்து பிப்ரவரியில் திறந்து வைக்கப்படும். அடுத்தாண்டு முதல் கல்லுாரி சொந்த கட்டடத்தில் செயல்படும். கல்லூரியில் ஆடிட்டோரியம், பெண்கள் தங்கும் விடுதியும் அமைக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை இணையம் அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் குஜிலியம்பாறையில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) அமைக்கவும் அனுமதி அளித்துள்ளார் என்றார்.கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ., காந்தி ராஜன், ஆர்.டி.ஓ., சக்திவேல், திட்ட அலுவலர் கிரி, தாசில்தார் பழனிச்சாமி, பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, கல்லுாரி முதல்வர் வாசுகி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு, பொன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை