உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துார் பள்ளியில் கலெக்டர் ஆய்வு

வேடசந்துார் பள்ளியில் கலெக்டர் ஆய்வு

வேடசந்துார்: வேடசந்துார் தாலுகா அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் வந்த பிறகு கனரா பேங்க் உதவியுடன் ரூ.1.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு, ரூ.5 லட்சம் திட்ட மதிப்பில் சோலார் பேனல், இரண்டு வகுப்பறைகளுக்கு குளிர்சாதன வசதி என கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கு சென்ற கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். போர்வெல், சுற்றுச்சுவர், டாய்லெட் வசதி பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ., சரவணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி