உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 10 ம் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பிய கலெக்டர்

10 ம் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பிய கலெக்டர்

திண்டுக்கல் : 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் தொடங்கி ஏப். 15 வரை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத உள்ள அரசு, அரசு உதவி பெறும்,தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் சரவணன் அஞ்சல் அட்டை வாயிலாக தனித்தனியே வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.அதில், 10 ஆண்டுகளாய் நீங்கள் அணிந்த பள்ளிச் சீருடை , தாங்கிய புத்தகம், உள்வாங்கிய பாடங்களுக்கு அர்த்தம் சேர்க்கும் காலமிது. தேர்வு எழுதும் நேரமிது. நேரத்தைப் பொன்னாக்கி கருத்தைக் கண்ணாக்கி , சிந்தனையை நேராக்கி, அறிவைக் கூராக்கி, நம்பிக்கையோடு படித்து, துணிவோடு தேர்வினை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் எழுதப் போகும் இத்தேர்வு உங்களை உயர்த்துவதோடு, உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மாற்றும். வெல்லுங்கள், வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !