கல்லுாரி கலை திருவிழா
ரெட்டியார்சத்திரம்: அரசின் உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் கல்லுாரி கலைத் திருவிழா ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதற்கான பரிசளிப்பு விழா முதல்வர் சுதா தலைமையில் நடந்தது. சங்கரன்கோவில் பி.எம்.டி., கல்லுாரி உதவி பேராசிரியர் ஜெயக்குமார் சான்றிதழ், பரிசு வழங்கினார். உதவி பேராசிரியர் உமா வரவேற்றார். மின் , மின்னணு பொறியியல் துறை தலைவர் செந்தில் குமார் பேசினார்.