மேலும் செய்திகள்
'கொடை' அருவியில் விழுந்த பொள்ளாச்சி மாணவர் மாயம்
20-Oct-2025
கொடைக்கானல்: - கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் மருத்துவ கல்லுாரி மாணவர் பலியானதை தொடர்ந்து பொதுமக்கள் சுற்றுலா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவையை சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் 11 பேர் பேத்துப்பாறை அருகே உள்ள அஞ்சுவீடு அருவிக்கு சுற்றுலா வந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த நந்தகுமார் 21, தவறி விழுந்து 4 நாட்களுக்கு பின் உடல் மீட்கப்பட்டது. இதுவரை 10 க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் சுற்றுலாத்துறையினர் , மாவட்ட நிர்வாகத்தினரை கண்டித்து உள்ளூர்வாசிகள், கட்சி பிரமுகர்கள் கொடைக்கானல் சுற்றுலா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தக் கோரி 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர். சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் கூறுகையில், ''ஆபத்தான அஞ்சு வீடு அருவி பகுதியில் வேலி , பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த திண்டுக்கல் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆர்.டி.ஓ., தாசில்தார், சுற்றுலா துறையினர் , ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.
20-Oct-2025