உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காங்., ஆர்ப்பாட்டம்

 காங்., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவரது பணிக் காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகள், மாற்றங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷ மிட்டனர். மண்டல தலைவர்கள், மகிளா காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர், மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மைகளை காங்., கட்சியினர் எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை