உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகர்களில் மக்களை பாடாய்படுத்தும் நெரிசல் நித்தம் நித்தம் அவதி: கடைகள், வாகன ஆக்கிரமிப்பால் தொல்லை

நகர்களில் மக்களை பாடாய்படுத்தும் நெரிசல் நித்தம் நித்தம் அவதி: கடைகள், வாகன ஆக்கிரமிப்பால் தொல்லை

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் முக்கிய சந்திப்புகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல்கள் இருந்து கொண்டே இருக்கிறது . முக்கிய ரோட்டோரங்களின் இருபுறங்களிலும் டூவீலர்கள்,கார்களை நிறுத்துவதால் ரோட்டின் நடுவே செல்லும் நிலையால் மக்கள் தவிக்கின்றனர். இதுதவிர ரோட்டோரங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நெடுஞ்சாலைத்துறை,உள்ளாட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கின்றனர். இதையும் மீறி நேர்மையான அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால் சம்பந்தபட்டவர்கள் தங்களுக்கு தெரிந்த பெரிய தலைகளை வைத்து காய் நகர்த்த அதிகாரிகளுக்கு டோஸ் விழ நமக்கு ஏன் வம்பு என ஒதுங்குகின்றனர்.இதனால் ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்டம் அதிகரிக்கிறது .இதனால் ஆம்புலன்சுகள் கூட அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுவும் பொங்கல்,தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு டிராபிக் பிரச்னையை தீர்க்க முடியாமல் போலீசாரும் திணறும் நிலை ஏற்படுகிறது. போலீசார் பற்றாக்குறை இருப்பதாலும் இப்பிரச்னை ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது. நகரின் முக்கிய பகுதிகளிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி டூவீலர்,கார்களை ரோட்டோரங்களில் நிறுத்தாமல் தடுத்து டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை