காங்., ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாநகராட்சி அருகில் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜி, குப்புசாமி, மாவட்ட துணை தலைவர்கள் காஜாமைதீன், ஜோதி ராமலிங்கம், பகுதி செயலாளர்கள் அப்பாஸ், பரமன், நாகலட்சுமி, உதயகுமார் பங்கேற்றனர்.