மேலும் செய்திகள்
நிர்வாகிகள் அறிமுகம்
23-Dec-2024
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நைனா முகமது தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். 78 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம்,பொது மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இளைஞரணி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை திண்டுக்கல்லில் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் சேட், துணைத் தலைவர் ரபீக் பங்கேற்றனர். கட்டணமின்றி உபயோக படுத்தும் குளிர்சாதன பெட்டி அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
23-Dec-2024