உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி காந்தி மார்க்கெட் புதிய கட்டட குத்தகை ஒப்பந்த புள்ளிகள் பெற ஆலோசனை கூட்டம்

பழநி காந்தி மார்க்கெட் புதிய கட்டட குத்தகை ஒப்பந்த புள்ளிகள் பெற ஆலோசனை கூட்டம்

பழநி: பழநி நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட் புதிய கட்டடத்திற்கான மூன்று ஆண்டு குத்தகை இனங்கள், ஒப்பந்த புள்ளிகள் இணையதளம் மூலம் பெறப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பழநி நகராட்சி சொந்தமான தினசரி காந்தி மார்க்கெட் சந்தையில் உள்ள பழைய கடைகளை இடித்து புதிதாக 150 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் டிச., 15 க்குள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குத்தகை விதிகளின் அடிப்படையில் 3 ஆண்டு குத்தகை இனங்கள் ஒப்பந்த புள்ளிகள் நவ., 14 அன்று காலை 11:00 மணிக்கு http://tnters.gov.inஎன்ற இணையதளம் மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. நகராட்சியின் முந்தைய ஒப்பந்ததாரர்கள், கடைக்காரர்கள் இ-டெண்டர் முறையில் கலந்து கொள்வது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. நகராட்சி கமிஷனர் டிட்டோ தலைமையில் நடைபெற்ற இதில் கடைக்காரர்கள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை