உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் சூறைக்காற்று மரங்கள் விழுந்து மின்தடை

தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் சூறைக்காற்று மரங்கள் விழுந்து மின்தடை

தாண்டிக்குடி: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி மலைப்பகுதியில் சில நாட்களாக தொடர் சூறைக்காற்று வீசுவதால் மலைக்கிராமங்கள் மின் தடை இருளில் தவித்து வருகின்றன. மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தாண்டிக்குடி பகுதியில் ஒரு வாரமாக கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கள் சாய்ந்து, சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட பந்தல்கள் தரையிலும் விழுந்தன. வீட்டின் கூரைகள் பறந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு மின்சப்ளை அளிக்கும் கொடைக்கானல் துணை மின் நிலைய மின் வழித்தடம், மாற்று சப்ளையான வத்தலக்குண்டு, செம்பட்டி மின்வழிப்பாதைகளில் மரங்கள் முறிந்தும், மரக்கிளைகள் விழுந்தும் 3 தினங்களாக தொடர் மின்தடை நிலவுகிறது. இதனால் மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் மின்தடைக்கான காரணங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான காற்றால் மின்வாரிய பணியாளர்களும் மின்தடையை சீர் செய்வதில் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று காலை தாண்டிக்குடி- வத்தலக்குண்டு ரோட்டில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை