உள்ளூர் செய்திகள்

கொப்பரை ஏலம்

நத்தம்:நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு 1250 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டது. தரத்திற்கேற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.146.25க்கும் குறைந்தபட்சமாக ரூ.142க்கும் ஏலம் போனது. விற்பனைக் கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து, இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார் ஏலத்தை நடத்தினர். நத்தம் பகுதி விவசாயிகள், வணிகர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை