உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் செயல்படும் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். முதல்தர தேங்காய் பருப்பு கிலோ அதிகபட்சம் ரூ.152, குறைந்தபட்சம் ரூ.143 என 35 மூடைகளாக 1054 கிலோ ஏலம் போனது. 2ம் தரம் கிலோ அதிகபட்சம் ரூ.115, குறைந்தபட்சம் ரூ.110 என 40 மூடைகளாக 1216 கிலோ ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !