உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.237.12

பழநியில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.237.12

பழநி : பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் கொப்பரை தேங்காய் ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ரூ.237.12க்கு ஏலம் போனது. பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் புதன் கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று சங்க செயலாட்சியர் இந்துமதி முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் 7.300 டன் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ.237.12க்கு ஏலம் ஆனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ