பசுமாடு மீட்பு
பழநி: பழநி அடிவாரம் பாரதி நகர் பகுதி செப்டிக் டேங்க் குழியில் பசுமாடு விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் பசுமாட்டை மீட்டனர். கர்ப்பமாக இருந்ததால் மாட்டிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. மாடு, கன்று நலமுடன் உள்ளது.