திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் சாமுராய் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன், பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் ரிச்மேன், பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் ஹரிவர்ணா சிசி அணி 40 ஓவர்களில் 236/9. (முகமதுஅப்துல்லா 60, முருகானந்தம் 57, கவுதம் 32, சஞ்சய் வெங்கடேஷ்வர் 30, கார்த்திகேயன், சதீஸ்குமார் தலா 3 விக்கெட்). சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சிசி அணி 30.4 ஓவர்களில் 82 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. (கிேஷார்குமார் 5 விக்கெட்). பழநி யுவராஜ் சிசி அணி 25 ஓவர்களில் 217/5. (கவியரசு 64, பிரதீப் 63 (நாட்அவுட்), கோபிநாத் 36, சண்முகநாத் 3 விக்கெட்). சேசிங் செய்த வேடசந்துார் சீனிபாலா அணி 22.1 ஓவர்களில் 104 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. (பிரபு 3 விக்கெட்). திண்டுக்கல் சாமியார் தோட்டம் சிசி அணி 25 ஓவர்களில் 156/8. (பாஸ்டின்ஸ்டாலின் 65, செல்வகுமார் 34, லியோஆல்வின், மணிகண்டன் தலா 3 விக்கெட்). சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் சிசி 21.4 ஓவர்களில் 159/3 எடுத்து வென்றது. (அஸ்சைன் 99,நாட்அவுட் ). திண்டுக்கல் வெற்றி சிசி அணி 25 ஓவர்களில் 165/9. (புகழேந்திரன் 58, ஜெயசூர்யா 35). சேசிங் செய்த ஆர்.வி.எஸ்., அணி 22.3 ஓவர்களில் 133 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. (கவுதம் 39, புகழேந்திரன், பாலகிருஷ்ணன் தலா 4 விக்கெட். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., அணி 25 ஓவர்களில் 178/6. (சங்கர் 46, மோனிஷ்குமார் 41, முத்துகாமாட்சி 31). சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 22.5 ஓவர்களில் 138 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது.