உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். நாமக்கல் மாவட்டம், சின்னக்கரசு பாளையத்தைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் 200க்கும் மேற்பட்டோர் கிரிவீதியில் ஆட்டம் ஆடி கிரிவலம் வந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ