உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதம் அடைந்த ரோடுகள்; செடிகள் சூழ்ந்த மின்கம்பங்கள் அப்பியம்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

சேதம் அடைந்த ரோடுகள்; செடிகள் சூழ்ந்த மின்கம்பங்கள் அப்பியம்பட்டி ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

கள்ளிமந்தையம்: தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி ஊராட்சியில் சேதம் அடைந்த ரோடுகள் ,செடிகள் சூழ்ந்த மின்கம்பங்கள் என பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.அப்பியம்பட்டி, வீரப்பகவுண்டன் வலசு, வேலாயுதம்பாளையம், செல்லக்குமார் வலசு கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தோட்டத்துச் சாலைகளில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். மெயின் ரோட்டில் இருந்து தோட்டத்து சாலைகள் வழியாக செல்லும் இணைப்பு ரோடுகள் சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல சிரமமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த ஊரில் இருந்து பகவான் கோயில் செல்லும் மண் ரோட்டை தார்ரோடாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. குடிநீர் பிரச்னை இல்லை. இன்னும் சில பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். குப்பை தினந்தோறும் அள்ளி அப்புறப்படுத்தப்படுகிறது. இந்த ஊராட்சியில் உள்ள பல மின் கம்பங்களில் செடிகள் படர்ந்து காணப்படுவதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

சேதமான ரோடு

கோவிந்தராஜ், விவசாயி: அப்பியம்பட்டியிலிருந்து தோட்டத்துச் சாலை வழியாக கூத்தம்பூண்டி செல்லும் தார் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் இருசக்கர வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை நவீன சமுதாய கூடம்

கந்தசாமி, விவசாயி: அப்பியம்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தை நவீன வசதிகளுடன் கூடியதாக மாற்றி கட்ட வேண்டும். கிராமத்தில் உள்ள தெரு ரோடுகள் சில சேதம் அடைந்துள்ளது இதனை சீரமைக்க வேண்டும். தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. பகவான் கோயில் செல்லும் மண் ரோட்டை தார் ரோடாக மாற்ற வேண்டும்.

செடிகள் சூழ்ந்த கம்பங்கள்

செல்வராஜ் விவசாயி: அப்பியம்பட்டி,சுற்றிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சிலவற்றில் செடிகள் முளைத்து மின் கம்பி வரை படர்ந்துள்ளதால் மின் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. செடி கொடிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றியகுளங்களை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை