உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து

சேதமான மின்கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து

விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்திண்டுக்கல் காந்திஜி புது ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆங்காங்கே இவைகள் திரிவதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். கால்நடைகளை ரோட்டில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஸ்வரி, திண்டுக்கல்.------சேதமான ரோடால் அவதிஒட்டன்சத்திரம் நகராட்சி மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் பல இடங்கள் கொண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எந்நேரமும் தடுமாறி கிழே விழுகின்றனர். ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிசாமி ஒட்டன்சத்திரம்.----------கழிவுநீரால் சுகாதாரக்கேடுதிண்டுக்கல் இ.பி.காலனி 2வது தெருவில் மழை நீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் கழிவு கலந்த நீர் வீடு,கடைக்குள் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. முறையான வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியசாமி, திண்டுக்கல்.----------மக்களை அச்சுறுத்தும் பஸ் ஸ்டாப்நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனுார் பஸ் ஸ்டாப் கட்டடம் சேதமடைந்து சிமெண்ட் பூச்சுபெயர்ந்துள்ளது. இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் இங்கு வரும் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். பஸ் ஸ்டாப்பை சீர் செய்ய வேண்டும் க.ரதிஷ்பாண்டியன்,பொம்மணம்பட்டி.----------சேதமான குடிநீர் தொட்டிதிண்டுக்கல் குள்ளனம்பட்டி மேல்நிலைத் தொட்டி அடிப்பகுதியில் சேதம் அடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அருகே அங்கன்வாடி மையம் இப்பதால் உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஜயகுமார், குள்ளனம்பட்டி.----------மின்கம்பத்தால் ஆபத்துகுஜிலியம்பாறை புளியம்பட்டி ரோட்டில் ராமகிரி பிரிவுக்கு அருகே மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எலும்பு கூடாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.கமலக்கண்ணன், குஜிலியம்பாறை.----------குப்பையால் உருவாகும் சீர்கேடுவடமதுரையில் நான்குவழிச்சாலை நால் ரோடு சந்திப்பு பகுதியிலிருக்கும் பாலத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் வாட்டர் கேன், மதுப்பாட்டில்கள், இதர குப்பை சேர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வாய்க்கால் பாதையும் அடைபட்டு கழிவுநீர் செல்வதில் சிக்கல் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமசாமி, வடமதுரை.....................................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்