அய்யலுாரில் ஆபத்தான இறுதி ஊர்வலங்கள்
வடமதுரை: அய்யலுாரில் 1977 முன் வரை தும்மனிக்குளத்தை சுற்றி வளைவாக திண்டுக்கல் திருச்சி ரோடு சென்றது. களர்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, சந்தைபேட்டை, வடகளம், குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்த மக்கள் இறுதி ஊர்வலங்களை இந்த ரோடு வழியே மயானத்திற்கு நடத்தினர். 1977ல் தேசிய நெடுஞ்சாலையாக மாறியபோது ரோடு நேராகி தும்மனிக்குளத்தின் நடுவே அமைந்தது. வழக்கமான வழி என இறுதி ஊர்வலங்கள் மட்டும் சென்று ஆபத்தான முறையில் ரோட்டை கடந்தன. அதிவேகத்திற்கான நான்கு வழிச்சாலையாக தற்போது மாறிய பின்னரும் அதே நிலை தொடர்கிறது. வழித்தடம் என ஆபத்தான முறையில் நான்கு வழிச்சாலையை கடந்து செல்கின்றனர்.மணியகாரன்பட்டி சமூக ஆர்வலர் பி.தங்கவேல் கூறுகையில், நான்குவழிச்சாலையின் இரு பக்கமும் பாதுகாப்பாக கடக்க வசதியாக இருக்கும் சுரங்கபாதை, சர்வீஸ் ரோடுகள் வழியே பாதுகாப்பாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.