உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்து பயணம்; கண்டுக்காத போலீஸ், போக்குவரத்து துறையினர்

சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்து பயணம்; கண்டுக்காத போலீஸ், போக்குவரத்து துறையினர்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பொதுமக்களை ஏற்றி செல்வது அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.மாவட்டத்தில் நகர் பகுதிகளை காட்டிலும் கிராமங்களில் பொதுமக்கள் திருமணம், கோயில் திருவிழாக்கள், இறப்பு உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகளுக்கு திறந்தவெளி சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்வது அதிகரித்துள்ளது. விவசாயம், கட்டட வேலை, கூலி வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் திறந்த வெளி வாகனங்களிலே செல்கின்றனர். அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி அதன் மீது அமர்ந்து பயணம் செய்தால் மின் கம்பிகளில் உரசி உயிரிழப்புகள் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததாலும், வேறு வழியில்லாத நெருக்கடியாலும் பலர் சரக்கு வாகனங்களில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் நிலை தொடர்கிறது.சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்ப்பது அவசியமாகும். இதே போல் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.இதில் பலர் காயமடைந்து சில நேரங்களில் உயிரிழப்பம் ஏற்படுகிறது. நடவடிக்கை எடுக்காததால் விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது தொடர்கிறது. வாகனத்தின் உரிமையாளர், டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விதிமீறல்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சம்பா
ஜன 26, 2025 05:35

மாற்றுவழியயும் கூறவும்


Shekar
ஜன 25, 2025 09:55

3 பேர் போகவேண்டிய ஆட்டோ ரிக்சாவில் 10 பேரை ஏற்றும் சேர் ஆட்டோவை யாரும் கேட்பதில்லை, அதை ஒப்பிட்டால் இது ஒன்றும் தவறில்லை


புதிய வீடியோ