உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 8 ஆண்டாக மூடி கிடந்த கோயிலை திறக்க முடிவு

8 ஆண்டாக மூடி கிடந்த கோயிலை திறக்க முடிவு

வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயிலை திறப்பது என அமைதிக்கூட்டத்தில் முடிவு ஏற்பட்டது.வெள்ளபொம்மன்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. கிராமத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக கோயில் மூடிக் கிடக்கிறது. 13 ஆண்டுகள் கடந்தும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகமும் நடக்காமல் உள்ளது. இ இதுகுறித்து தாக்கலான வழக்கை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அமைதிக்கூட்டம் நடந்தது. தாசில்தார் சுல்தான்சிக்கந்தர், மண்டல துணை தாசில்தார் சக்திபொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ..க்கள் வேலுமணி, முத்துச்சாமி, கிராம மக்கள் பங்கேற்றனர். இரு தரப்பும் சமாதானமாக கோயிலை திறப்பதோடு ஜூலை 8 ல் ஒரு தரப்பினர் சிறு வழிபாடு நடத்துவது, ஆக.23ல் அனைவரும் கோயிலில் அமர்ந்து கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி குறித்து ஊர்கூட்டம் நடத்தி முடிவு செய்வது என முடிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !