மேலும் செய்திகள்
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
26-Nov-2025
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் என்.பி.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் செம்பட்டி பசுமை குறள் தன்னார்வ அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரேவதி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சுசீலா, தனியார் அறக்கட்டளை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராமு பேசினார். மாணவர்களுக்கு தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ், மஞ்சப்பை, மரக்கன்று, திருக்குறள் புத்தகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையேடு, எழுது பொருட்கள், பிஸ்கட் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியர் அருள் டேவிட் ராஜ், பசுமை குறள் அமைப்பின் தன்னார்வலர்கள் சவேரியார், ரமணன், முருகன் செய்திருந்தனர்.
26-Nov-2025