வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Deal would have not completed yet, May be the reason if fund is already alloted.
மாவட்டத்தில் ஆன்மிக நகரமான பழநியை இணைக்க திண்டுக்கல் ரோடு, புது தாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு, மடத்துக்குளம் வழி கோவை ரோடு, கொழுமம் வழி கோவை சாலை, கொடைக்கானல் ரோடு உள்ளன. பழைய தாராபுரம் ரோடு கோதைமங்கலம் பகுதி, புது தாராபுரம் ரோடு சத்யா நகர் பகுதி, திண்டுக்கல் ரோட்டில் ஆயக்குடி பகுதி, சத்திரபட்டி பகுதி, உடுமலை ரோட்டில் தாழையூத்து பகுதிகளில் ரயில்வே கிராசிங் உள்ளன. நகருக்குள் புதுநகர் பகுதியில் ரயில்வே கிராசிங் உள்ளன.ரயில்வே கிராசிங் பகுதிகளில் ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும் போது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக புது தாராபுரம் ரோட்டில் காலை, மாலை நேரத்தில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பள்ளி, அலுவலகம், கல்லுாரிக்கு செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அவசர மருத்துவ தேவைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கையில் சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாழையூத்து, பழநி-தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூ.300 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் பணிகள் இதுவரை துவங்காத நிலையில் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Deal would have not completed yet, May be the reason if fund is already alloted.