புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம்; போலீஸ் ஸ்டேஷன் முன் குடும்பத்தினர் தர்ணா
செம்பட்டி ; புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்ததால் பாதிக்கப்பட்ட பெண்போலீஸ் ஸ்டேஷன் முன்பு குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.பழைய செம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் குணசேகரன் 34. இவரது மனைவி முருகேஸ்வரி 30. இதை ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் மகளிர் சுய உதவி குழு பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறி குணசேகரன், முருகேஸ்வரி, இவர்களது குழந்தைகளை சிலர் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.மன உளைச்சலில் இருந்த குணசேகரன் இரு நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதற்கு காரணமான சம்பந்தப்பட்டவர்கள் மீது முருகேஸ்வரி செம்பட்டி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்வதில் போலீசார் தாமதப்படுத்தியதாக கூறி, நேற்று இரவு 7:30 மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு தனது 3 குழந்தைகள், ஆதரவாளர்களுடன் முருகேஸ்வரி தர்ணாவில் ஈடுபட்டார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததால் கலைந்தனர்.