உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம் : கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலூர் வழியாக கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஒட்டன்சத்திரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு தினமும் காலை 6 :00மணிக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. வடகாடு, பாச்சலூர், கே.சி பட்டி வழியாக கொடைக்கானல் செல்லும் இந்த பஸ் கொடைக்கானலில் இருந்து மதியம் 12:00 மணிக்கு ஒட்டன்சத்திரத்திற்கு புறப்படுகிறது.கோடைகாலம் என்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பஸ்ஸை விட்டால் இப்பகுதி மக்கள் கொடைக்கானல் செல்வதற்கு பழநி அல்லது வத்தலக்குண்டு வழியாக செல்ல வேண்டும். எனவே ஒட்டன்சத்திரத்தில் இருந்து இன்னும் கூடுதல் பஸ்களை கொடைக்கானலுக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ