மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
07-Oct-2026
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். காங்., ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபிஜி -ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இத்திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், ஊதியமாக ரூ.700ம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் அருள்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
07-Oct-2026