உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ.,வை கைது செய்ய வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாப்பாத்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பாலபாரதி, மாநில பொருளாளர் ராணி கண்டித்து பேசினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்று எம்.எம்.ஏ.,வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !