மேலும் செய்திகள்
26 பேருக்கு காய்ச்சல் 2 பேருக்கு டெங்கு
27-Sep-2024
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ரோட்டோரங்கள்,பொது இடங்களில் தேங்கும் மழை நீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்'கொசுக்களின் உற்பத்தி அதிகளவில் உள்ளது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. சமீபத்தில் குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்த நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27-Sep-2024