உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி : பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில்ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.அவர்களுடன் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தைப்பூச பக்தர்கள் பால் காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்து அலகு குத்தி கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர். கிரிவீதியில் தள்ளுவண்டிக் கடைகள், எளிதில் நகர்த்திச் செல்லக்கூடிய கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோயில் பொது தரிசன வழி, கட்டண தரிசன வழிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்துஇருந்து தரிசனம்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி